Home » முஸ்லிம் மக்கள் இன்று மீலாதுன் நபியின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்கள்.

முஸ்லிம் மக்கள் இன்று மீலாதுன் நபியின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்கள்.

Source

இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் இன்று “மீலாதுன் நபி” எனப்படும், நபிகள் நாயகம் அன்னவர்களின் பிறந்த தின நிகழ்வைக் கொண்டாடுகிறார்கள். இதனை அடிப்படையாகக் கொண்டு இலங்கையில் இன்றைய தினம் வர்த்தக, வங்கி, மற்றும் பொதுவிடுமுறை தினமாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இன்றைய சவுதி அரேபியாவின் மக்கா நகரில் கிறிஸ்துவிற்குப் பின் 570 ஆண்டு நபிகள் நாயகம் அவர்கள் பிறந்தார்கள். முஹம்மத் என்று இயற்பெயர் உடைய நபிகள் நாயகம் அன்னவர்கள் அவர்கள் சமூகத்தில் சிறு வயது முதல் உண்மையாளர் என்றும் நம்பிக்கையாளர் என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டார்கள்.

நாற்பதாவது வயதில் அவர்களுக்கு நபித்துவம் வழங்கப்பட்டது. அன்று முதல் நபிகள் நாயகம் அவர்களுக்கு உலகை விட்டு பிரியும் வரை முஸ்லிம்களின் புனித வேதமான அல்குர்ஆன் கட்டம் கட்டமாக அருளப்பட்டது.

நபிகள் நாயகம் அவர்கள் தனது 53ஆவது வயதில் மக்கா நகரிலிருந்து மதீனா நகரை சென்றடைந்தார்கள். இந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டே உலக முஸ்லிம்களின் நாட்;காட்டியான ஹிஜ்ரி வருடமும் கணிக்கப்படுகிறது.

மனித சமூகத்தின் ஒற்றுமை, அடிமை ஒழிப்பு, சமத்துவம், சகோதரத்துவம், பெண் உரிமை போன்ற விடயங்களை வெளிப்படுத்துவதற்காக நபிகள் நாயகம் அன்னவர்கள் ஆற்றிய பணிகள் இன்றளவும் உலகளாவிய ரீதியில் பாராட்டப்படுகின்றமை சிறப்பம்சமாகும்

நேர்மையான மக்களுக்கு இறைவன் உயர்ந்தபட்ச கண்ணியத்தை வழங்குவதை நபிகள் நாயகத்தின் வாழ்வை ஆராய்வதன் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். புனித மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் அவர்கள் உண்மையாளர் என்றும் நம்பிக்கையாளர் எனவும் சமூகத்தில் அறியப்பட்டார். அவர்களின் வழிகாட்டல்களை பின்பற்றி சகல விதமான தீவிரவாதங்களையும் ஒழித்து அபிவிருத்தி அடைந்த நாடொன்றை கட்டி எழுப்ப அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மீலாதுன் நபி தின வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நபிகளாரின் வழிகாட்டல்களை சமூக நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் தினேஷ் குணவர்தனவின் மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தியில். குறிப்பிடப்பட்டுள்ளது அவர்களின் வழிகாட்டல்கள் மூலம் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது நபிகளாருக்கு செய்யும் உயர்ந்த கௌரவமாகும்.

நபிகள் நாயகத்தின் மனிதாபிமான வாழ்வியல் கற்றுத்தந்த பாடங்களை முன் எப்போதும் இல்லாத வகையில் தற்போதைய சமூக நலனுக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன சுட்டிக்காட்டி உள்ளார்.

மீலாது நபி தினத்தை முன்னிட்டு இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் விசேட ஆன்மீக கலாசார நல்லிணக்க நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டு இருக்கின்றன.

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை ஒழுங்கு செய்துள்ள விசேட மீலாதுன் நபி தின நிகழ்ச்சிகள் மாத்தளை மாவட்டத்தின் கலேவல, நமடகஹவத்த (Namada-Gahawaththa) அல்புர்கான் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் இருந்து இன்று பகல் ஒரு மணி தொடக்கம் மாலை 6 மணி வரை நேரடியாக அஞ்சல் செய்யப்பட உள்ளது.

இதேவேளை புனித மீலாதுநபி தினத்தை முன்னிட்டு கொழும்பு மாநகர சபை வளாகம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டில் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஐ ஏ கலீலுர் ரஹ்மானின் யோசனைக்கமைய முன்னாள் மாகாண சபை மேயர் ரோசி சேனாநாயக்க இந்த வேலை திட்டத்தை முதலில் ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image