யாழ்ப்பாணம் – தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டத்தின், தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் இன்று பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இது தொடர்பாக நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நீர் வழங்கல் திட்டத்திற்காக 27 கோடி டொலர் செலவிடப்பட்டுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.
இதன் மூலம் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு குடிநீர் வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.