Home » லிமினியின் அரசியல் வருகையை உறுதி செய்த அர்ச்சுனா எம்பி!

லிமினியின் அரசியல் வருகையை உறுதி செய்த அர்ச்சுனா எம்பி!

Source

நாமல் ராஜபக்ச சிறையில் அடைக்கப்பட்டால், அவரது மனைவி லிமினி ராஜபக்ச உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அரசியலில் களமிறங்கக்கூடும் என்றும், அதன் மூலம் அரசியல் நிலைமை பெரும் மாற்றத்தைச் சந்திக்கலாம் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய அவர், நாமல் ராஜபக்ச தவறு செய்திருந்தால் அவருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதில் தமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனக் குறிப்பிட்டார்.

அதேபோன்று, நிலக்கரி கொள்வனவு விவகாரத்தில் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளதாகக் கூறப்படும் அமைச்சர் குமார ஜயகொடி மீதும், அமைச்சர் பிமல் ரத்நாயக்க மீதும் உரிய விசாரணைகளை நடத்தி, தவறு நிரூபிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

சட்டம் அனைவருக்கும் சமமானது என ஜனாதிபதி கூறுகின்ற போதிலும், நடைமுறையில் அது அவ்வாறு செயற்படுத்தப்படுகின்றதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

நாமல் ராஜபக்சவைச் சிறையில் அடைத்து, அவருக்கு எதிரான வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துவதன் மூலம் அரசியல் வெற்றியைப் பெறலாம் என அரசாங்கம் கருதினால், அதன் எதிர்கால அரசியல் விளைவுகளையும் புரிந்துகொள்ள வேண்டும் என அர்ச்சுனா தெரிவித்தார்.

நாமல் ராஜபக்ச சிறையில் அடைக்கப்பட்டால் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் அரசியலில் களமிறங்கக்கூடும். அப்போது அவர்களுக்கு ஆதரவாக மக்கள் அணிதிரளலாம். இதனால் தற்போது 159 ஆசனங்களைக் கொண்டுள்ள அரசாங்கத்துக்கு எதிராக எதிர்காலத்தில் 180 அல்லது 200 ஆசனங்களைப் பெறக்கூடிய அளவுக்கு அரசியல் சூழல் மாறலாம் என்றும் அவர் எச்சரித்தார்.

மேலும், சாட்சியங்களை மாற்றியமைத்தல், நீதிபதிகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், மருத்துவர்கள், பொறியியலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றமை குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

அதிகாரம் கையில் இருப்பதால் அதனை எவ்வாறு பயன்படுத்துகின்றோம் என்பதை அரசாங்கம் சிந்திக்க வேண்டும் என்றும் அர்ச்சுனா வலியுறுத்தினார்.

The post லிமினியின் அரசியல் வருகையை உறுதி செய்த அர்ச்சுனா எம்பி! appeared first on LNW Tamil.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both