லெபனானில் வெடிப்புச் சம்பவம் ஆயிரக்கணக்கானோர் காயம்.
லெபனான் தலைநகர் பேறூட்டில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் சிறுமி ஒருவர் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
தூர இடங்களிலிருந்து பயன்படுத்தக்கூடிய தானியங்கி இயந்திரங்களை பயன்படுத்தி, இஸ்ரேல் இந்தத் தாக்குதல்களை நடத்தியிருப்பதாக ஹிஸ்புல்லா அமைப்பு சுட்டிக்காட்டியிருக்கிறது.
இஸ்ரேல் திட்டமிட்ட இந்தத் தாக்குதல்களினால் இரண்டாயிரத்து 800க்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாக ஹிஸ்புல்லா அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
லெபனானுக்கான ஈரான் தூதுவரும் இந்த சம்பவத்தில் காயங்களோடு உயிர்த்தப்பியுள்ளார். இஸ்ரேல் இந்தத் தாக்குதல்களுக்கு முழுமையாக பொறுப்பேற்க வேண்டும் என்று ஹிஸ்புல்லா அமைப்பின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
தொலைத்தொடர்பாடலுக்காக பயன்படுத்தப்படும் இயந்திரங்களை வெடிக்கச் செய்ததன் மூலம் இந்த மரணங்கள் இடம்பெற்றிருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.