லெபானில் வாழும் தமது பிரஜைகள் வெளியேற வேண்டும் என அமெரிக்கா கோரிக்கை
லெபானில் வாழும் தமது பிரஜைகள் வெளியேற வேண்டும் என அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.
மத்திய கிழக்கில் பதற்ற நிலை தீவிரம் பெற்று வருவதால் தமக்கு கிடைக்கக் கூடிய எந்தவொரு அனுமதி பத்திரத்தையாவது பயன்படுத்தி வெளியேற வேண்டும் என லெபானில் இயங்கும அமெரிக்க தூதரகம் ஆலோசனை வழங்கியுள்ளது.
இதற்கு முன்னதாக, ஐக்கிய ராஜ்ஜிய வெளிவிவகார அமைச்சர் மத்திய கிழக்கின் நிலைமை மிகத் தீவிரமாக சீர்குலையலாம் என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஹமாஸ் இயக்கத்தின் அரசியல்துறை தலைவர் இஸ்மையில் கானி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இஸ்ரேல் மீது கடும் பதிலடி கொடுக்கப் போவதாக, ஈரான் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.