வடகொரியா – சீனா ராஜதந்திர உறவு: 75 வருடங்கள் பூர்த்தி
வடகொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையில் ராஜதந்திர உறவுகள் ஆரம்பமாகி, 75 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
வடகொரிய தலைவர் கிம் யொங் உன், சீனத் ஜனாதிபதி ஸி ஜின் பிங்கிற்கு வாழ்;த்துச் செய்தியொன்றை தந்தி மூலம் அனுப்பியுள்ளார்.
இன்று இரு நாடுகளிலும் விசேட நிகழ்ச்சிகளும் கொண்டாட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு;ள்ளன. வடகொரியாவின் நீண்டகால நட்புறவு நாடாக சீனா இருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.