இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டும் தமிழக படகுகளை பிடிப்பதற்கும் இடிப்பதற்குமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் வழங்கப்பட்ட படகுகளை கடற்றொழில் நீரியல் திணைக்களத்திடம் இருந்து சங்கங்கள் பெற்று இன்று திருத்தங்களில் ஈடுபடுகின்றனர்.
இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டும் தமிழக படகுகளை பிடிப்பதற்கும் இடிப்பதற்குமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் அண்மையில் 4 விசைப்படகுகள் வண மாகாண மீனவ அமைப்புக்களிற்கு வழங்கப்பட்டன. இலங்கை கடற்பரப்பிற்கு எல்லை தாண்டிய சமயம் கடற்படையினரால் பிடிக்கப்பட்டு அரச உடமையாக்ப்ப்பட்ட படகுகளே இவ்வாறு கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மீனவ அமைப்புக்களிற்கு வழங்கும் பத்திரங்களை கையளித்திருந்தார்.
இவ்வாறு வழங்கும் பத்திரங்களை பெற்ற சங்கங்களிடம் இன்றைய தினம் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள யாழ். மாவட்ட பிரதிப் பணிப்பாளர் சுதாகரன் படகுகளை கையளித்தார்.
படகுகளை பெற்றுக்கொண்ட சங்கங்கள் இன்று உடனடியாகவே படகுகளை திருத்தும் பணியில் ஈடுபடுகின்றனர். திருத்தப் பணிகள் முடிவுற்றதும் அவை எடுத்துச் செல்லப்படவுள்ளது. இதன்போது
ஆரோக்கியமாதா என எழுதப்பட்ட படகு பருத்தித்துறை முனைச் சங்கத்திற்கும்
எம்.எஸ்.ராஜ்குமார் என எழுதப்பட்ட 992 இலக்கப்படகு முல்லைத்தீவு மாவட்டச் சங்கத்திற்கும் வழங்கப்பட்ட நிலையில் அவற்றிற்கான திருத்தப் பணிகள் துரித கதியில் இடம்பெறுகின்றது.
TL