விருப்பு வாக்குகளுக்காக சண்டையிட வேண்டாம் – பெப்ரல்
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விருப்பத் தெரிவு இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளதால், விருப்பு வாக்குகளுக்காக மோதல்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என பெப்ரல் அமைப்பு வேட்பாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பெரும்பாலான அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள போதிலும், அதிகமானவர்கள் சமூக ஊடக வலைதளங்களை நாடியிருக்கிறார்கள்.
எது எவ்வாறான போதிலும், தேர்தல் சட்டங்களை மதித்து, பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும் என பெப்ரல் அமைப்பு கேட்டுள்ளது.
இன்றளவில் பொதுத் தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பாக 257 முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக தேசிய தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்த முறைப்பாடுகளில் 181 பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.