விவசாயிகளுக்கு நிவாரணங்களை வழங்க தயார்.
இதுவரை உர நிவாரணம் வழங்குவதற்கு பத்து மில்லியன் ரூபா வரையான தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தித் திணைக்களம் அறிவித்துள்ளது.
திணைக்களத்தின் மதிப்பீடுகளுக்கு அமைய, இம்முறை எட்டு லட்சம் ஹெக்டெயர் அளவிலான வயற்காணிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகளுக்கு எதுவித தாமதமும் இன்றி, உர நிவாரணம் வழங்கப்படுவதாக விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பி.விக்ரமசிங்க தெரிவித்தார்.
தாமதம் குறித்த போலி பிரசாரங்களை அவர் நிராகரித்து பேசினார்.
அம்பாறை, கிளிநொச்சி மாவட்டங்களில் உர நிவாரணம் வழங்குவதற்காக ஏறத்தாழ ஐந்து மில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டதாக கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் யு.டி.ரோஹன ராஜபக்ஷ கூறினார்.