வெளிநாட்டுப் பல்கலைக் கழக மருத்துவக் கற்கையை பூர்த்தி செய்யும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு தீர்வு
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் மருத்துவ மற்றும் மருத்துவ பட்டப்பின் படிப்பை தொடரும் மாணவர்களை பதிவு செய்வதில் காணப்படும் சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் என அமைச்சர் ரமேஸ் பத்திரண தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு அவர் இதுபற்றி கருத்து வெளியிட்டார். முதற்கட்டமாக உரிய மாணவர்களுக்கு ஒருவருட தற்காலிகப் பதிவு வழங்கப்படவிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து நிரந்தரப் பதிவை மேற்கொள்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கிறது.
நாட்டின் வைத்தியசாலைகளில் 52 மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவியதாகவும் அவற்றை உடனடியாக இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பெரும்பாலான ஆயுர்வேத வைத்தியர்கள் தொழிலை எதிர்பார்த்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
நாட்டில் பெரும்பாலான வைத்தியர்கள் வருடாந்தம் உருவாக்கப்படுவதால், மாணவர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழங்களில் கற்கச் செல்வதை வரையறுப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சுதேச வைத்தியர்களை பதிவு செய்யும் நடவடிக்கை இடைநிறுத்தப்படவில்லை என்று விவாதத்தில் கலந்துகொண்ட இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி சுட்டிக்காட்டினார்.