வெளிநாட்டு கடவுச்சீட்டு பெறுவதில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு
வெளிநாட்டு கடவுச்சீட்டுப் பெறுவதில் நிலவும் பிரச்சினைகளை விரைவில் தீர்க்கவுள்ளதாக அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதியில் இருந்து 20ஆம் திகதிக்கு உட்பட்ட காலப்பகுதியில் கடவுச்சீட்டுக்களைப் பெறுவதற்கு காத்திருக்கும் வரிசையினை இல்லாது செய்ய முடியும் என்றும் அவர் கூறினார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் பணிகளை அமைச்சர் இன்று பொறுப்பேற்றார். இதன்போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.
கடவுச்சீட்டுக்களைப் பெறுவதற்காக காத்திருப்பவர்களின் வரிசையினைக் குறைப்பதற்கு மாற்று யோசனைகள் இருக்கும் பட்சத்தில், அது பற்றி தெரிவிக்குமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.