வெளிப்படை தன்மையுடைய அரசாங்கம் உருவாக்கப்படும் – சஜித்
வெளிப்படைத் தன்மையுடன் செயற்படும் அரசாங்கத்தை உருவாக்குவதே தமது இலக்கு என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் பதவிகளைப் பெறுவது அவ்வளவு இலகுவானதல்ல. தங்கள் அரசாங்கத்தின் கீழ் பொறுப்பேற்பவர்கள் 24 மணி நேரமும் பொதுமக்களுக்காக பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற தனது இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு கொள்முதல் செயல்முறையும் முழு வெளிப்படைத்தன்மையுடன் இடம்பெறும் என்று சஜித்; பிரேமதாச உறுதியளித்தார். நாட்டை அழித்த திருடர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு நாட்டு மக்களுக்கு நீதி வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.