வேட்பாளர்களக்கான விருப்பு இலக்கம் அடுத்த வாரம்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களக்கான விருப்பு இலக்கம் அடுத்த வாரம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சகல வேட்பாளர்களது பட்டியல் அகர வரிசைப்படி ஒழுங்குபடுத்தப்படவுள்ளன. அதற்கு சில தினங்கள் தேவைப்படுகின்றன.
இந்த முறையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களது விருப்பு இலக்கத்தை தயாரிக்கும் நடவடிக்கை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளால் நேற்றைய தினத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.