வேட்புமனு பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு.
பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.
மாவட்ட செயலகங்களில் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் மற்றும் உதவி தெரிவத்தாட்சி அதிகாரிகள் வேட்புமனுக்களைப் பொறுப்பேற்பர்.
இதேவேளை, தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் பொறுப்பேற்கும் நடவடிக்கையும் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடையும்.
101 அரசியல் கட்சிகள் இதுவரை வேட்புமனுக்களை கையளித்திருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் 52 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களைக் கையளித்துள்ளன. 349 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.
இதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் பற்றிய விபரம் தேர்தல் செயலகத்திடம் விமல் ரத்நாயக்க தலைமையில் இன்று ஒப்படைக்கப்படும்.
கொழும்பு மாவட்ட வேட்புமனு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் கொழும்பு மாவட்ட செயலகத்தில் கையளிக்கப்படும்.
ஏனைய மாவட்டங்களின் வேட்புமனுக்கள் குறித்த மாவட்ட செயலகங்களில் கையளிக்கப்படும்.