ஹமாஸ் அமைப்பின் முன்னாள் தலைவரை இஸ்ரேல் படுகொலை செய்ததாக அறிவிப்பு
ஹமாஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் படுகொலைக்கு இஸ்ரேல் முழுமையாக பொறுப்புக் கூற வேண்டும் என்று இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
சவூதி அரேபியாவை தலைமையகமாகக் கொண்டியங்கும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு நேற்று இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டிருந்தது.
ஈரானின் இறைமையை மீறும் வகையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக 57 நாடுகளை உள்ளடக்கிய இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியிருக்கிறது.
ஹனியாவின் படுகொலை காஸாவில் இடம்பெறும் யுத்தத்தை பிராந்திய மோதலாக மாற்றியமைக்கும் சம்பவமாக மாறியிருக்கிறது என அமைப்பின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.