தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க பிரித்தானியாவிற்கு விஜயம் செய்துள்ளார். அவருக்கு விமான நிலையத்தில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நாளை 15 ஆம் திகதி லண்டனில் நடைபெறவுள்ள இலங்கையர்களின் மாநாட்டில் பங்கேற்பதற்காகவே அவர் பிரித்தானியா பயணித்தார்.
இங்கிலாந்தில், தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்கும் இலங்கையர்களுடன் பல மாநாடுகளில் அனுர குமார திசாநாயக்க பங்கேற்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அவர் எதிர்வரும் 17 ஆம் திகதி மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.