அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே தலைவர் சஜித் பிரேமதாஸ
நாட்டிலுள்ள அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே தலைவர் சஜித் பிரேமதாஸவே ஆவார் என ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் கூட்டணி அரசாங்கத்தின் கீழ், வரிச்சுமையை குறைப்பதன் மூலம் வரிகளை குறைத்தல், அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்தல்.
விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குதல், குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு 20 ஆயிரம் ரூபாய் மாதாந்த கொடுப்பனவை வழங்குதல், சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை 15 சதவீதமாக அதிகரித்தல் என பல நிவாரணங்கள் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் கூட்டணி அரசாங்கத்தின் கீழ், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் திறன் வகுப்பறைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் ஜே.சி.அலவத்துவல மேலும் குறிப்பிட்டுள்ளார்.