டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்துச் செய்யப்பட்டதன் மூலம் ஐக்கிய மக்கள் சக்தி அனைத்து உறுப்பினர்களின் பதவிகளும் பெரும் அபாயத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
டயானா கமகே ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் துணைச் செயலாளராக இருப்பதும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அந்தப் பதவியுடன் பல வேட்பு மனுக்களில் அவர் கையொப்பமிட்டிருப்பதும் இதற்குக் காரணம்.
தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்ட ஆவணங்களில் அவர் கட்சியின் துணைச் செயலாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் கட்சியின் சட்டப்பூர்வ தன்மை குறித்து சிக்கல் நிலை உருவாகியுள்ளது.
பிரித்தானிய பிரஜையாக இருந்த அவரது இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை உச்ச நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது.
தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் அவர் துணைச் செயலாளராக இருந்தபோது வழங்கப்பட்ட வேட்புமனுக்கள் ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.