அனைவரையும் இணைத்து செயற்படும் அரசாங்கம் ஸ்தாபிக்கப்படும்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தவறான அணுகுமுறைக்கு எதிராக அச்சமின்றி வீதியில் இறங்கிப் போராடியவர்களே இன்று தம்முடன் இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அக்கரைப்பற்று பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
எனது தந்தை ரணசிங்க பிரேமதாசாவின் வழிகாட்டலுக்கமைய ஜாதி, மத பேதமின்றி, இனவாதமின்றி அனைத்து சமூகத்தினரையும் எனது சகோதர சகோதரிகள் போன்று அரவணைத்துச் செல்வேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து சமூகத்தினரினதும் உரிமைகளையும் பாதுகாப்பதுடன், அபிவிருத்திகளும் முன்னெடுக்கப்படும். விசேடமாக விவசாயிகளுக்கு 50 கிலோகிராம் நிறையுடைய உர மூட்டையினை ஐயாயிரம் ரூபாவுக்கு வழங்க நடவடிக்கை எடுப்போம் எனவும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்துள்ளார்.