அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் வாக்களிப்பு முடிவடைந்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கெடுப்பு முடிவடைந்துள்ளது. இந்தியானா, தெற்கு கரோலினா, வேர்ஜினியா போன்ற மாநிலங்களிலும் வெற்றியைத் தீர்மானிக்கக்கூடிய ஜோர்ஜியா மாநிலத்திலும் வாக்கெடுப்பு முடிவடைந்திருக்கின்றது.
ஜனநாயகம், பொருளாதாரம் போன்ற விடயங்கள் இம்முறை அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.
இதுவரை வெளியிடப்பட்ட பெறுபேறுகளுக்கு அமைய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் கமலா ஹரிஸ் மூன்று தொகுதிகளில் வெற்றியை உறுதிப்படுத்தியிருக்கின்றார்.
குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் 19 தொகுதிகளில் முன்னிலை வகிப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
புளோரிடா, இந்தியானா, கென்ராக்கி போன்ற மாநிலங்களில் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை வகிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு வேட்பாளர் ஒருவர் 270 ஆசனங்களை பெறுவது அவசியமாகும்.