அரச ஊழியர்களின் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படும் – சஜித் பிரேமதாச
அனைத்து அரச ஊழியர்களின் கொடுப்பனவுகளுடன் கூடிய குறைந்தபட்ச சம்பளம் 57 ஆயிரத்து 500 ரூபாவாக அதிகரிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
வரகாபொலவில் ஐக்கிய மக்கள் சக்தி நேற்று ஏற்பாடு செய்திருந்த மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பல தொகுதி அமைப்பாளர்கள் சஜித் பிரேமதாசவுக்கு தமது ஆதரவை தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர்.