அரச சேவையில் கடமையாற்றும் பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கான போட்டி பரீட்சைக்குரிய விண்ணப்பங்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழழை வரை பொறுப்பேற்கப்படும். மார்ச் மாதம் புதிய பாடசாலைத் தவணை ஆரம்பமாவதற்கு முன்னர் 20 ஆயிரம் பட்டதாரிகளையும், கல்விக் கல்லூரிகளில் கற்கைநெறியினைப் பூர்த்தி செய்த, 8 ஆயிரம் பேரையும் ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு கல்வியமைச்சுத் திட்டமிட்டுள்ளது. 12 ஆயிரம் ஆசிரியர்கள் ஓய்வுபெற்றதையடுத்து ஆசிரியர்களுக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.