அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவிப்பு.
சந்தையில் நாட்டரிசியின் விலை கட்டுப்பாட்டு விலையை விட அதிகரித்துள்ளதாக மரதகஹமுல அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டரிசி நெல்லின் தட்டுப்பாடு இதற்கான காரணமாகும். ஒரு கிலோ நாட்டரிசி சந்தையில் 230 ரூபா என்ற சில்லறை விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
நாட்டரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை 220 ரூபாவாகும் என தலைவர் பி.கே.ரஞ்சித் தெரிவித்துள்ளார். கடந்த போகத்திலும்.
இந்த போகத்திலும் நாட்டரிசி நெல் விளைச்சல் உகந்த மட்டத்தில் இருந்ததாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, சந்தையில் அரிசிக்கு செயற்கை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தற்போதைய நிலைமை குறித்து அரிசி ஆலை உரிமையாளர்களுடன் கலந்துரையாடி தீர்வு எட்டப்படும் என வர்த்தக அமைச்சின் செயலாளர் எம்.எம்.நயிமுதீன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சதொச நிறுவனத்திடம் இருந்து நேரடியாக நாட்டரி நெல்லை கொள்வனவு செய்து அதனை அரிசியாக மாற்றி சந்தைக்கு விடுவிப்பதற்கான வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படுகிறது.