அரிசி, முட்டை, தேங்காய் விலை மட்டங்கள் பற்றிய கலந்துரையாடல் இன்று
சந்தையில் நிலவும் அரிசி, முட்டை, தேங்காய் விலை மட்டங்கள் பற்றி ஆராயும் கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் கிடைத்துள்ளது. நெல் சந்தைப்படுத்தல் சபையின் மூலம் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்து, மூடப்பட்டுள்ள அரசி ஆலைகளை மீளவும் ஆரம்பிப்பது இதற்குரிய ஒரே தீர்வென விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.என்.விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
அடுத்தாண்டு தொடக்கம் இதற்குரிய முறையான வேலைத்திட்டம் அமுலாக்கப்படும். இதன்மூலம் அரிசி விலையை கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கும். நாட்டின் 11 மாவட்டங்களில் விவசாயிகளுக்கான உர மானிய தொகை அவர்களது வங்கிக் கணக்குகளில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் ஒவ்வொரு விவசாயியும் 15 ஆயிரம் ரூபாவினை பெறுகிறார். எஞ்சிய தொகை எதிர்வரும் 25 நாட்களுக்குள் வங்கிக் கணக்கில் வைப்பு செய்யப்படும்.