ஆட்சியமைக்கும் அதிகாரத்தை வழங்கிய சகல மக்களுக்கும் ஜனாதிபதி பாராட்டு.
ஆட்சியமைக்கும் அதிகாரத்தை வழங்கிய சகல மக்களுக்கும் ஜனாதிபதி பாராட்டு.
இன வேறுபாட்டை முடிவுக்கு கொண்டு வராமல் நாடு என்ற ரீதியில் முன்னேற முடியாது என ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டு மக்களுக்காக இன்று இரவு ஆற்றிய விசேட உரையிலேயே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
தனது அரசியல் செயற்பாட்டின் மீது நம்பிக்கையுடன் புதிய சோதனைகளுக்கு அஞ்சாமல் நாட்டை ஆளும் அதிகாரத்தை வழங்கிய ஒட்டுமொத்த மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்த வெற்றிக்காக பல்வேறு தியாகங்களை செய்த அனைவரையும் மரியாதையுடன் நினைவுகூர வேண்டும். வளமான நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. நாட்டை கட்டியெழுப்புவது கூட்டு முயற்சி என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மாற்றத்திற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நம்பிக்கையை கட்டியொழுப்புவதில் தங்கியுள்ளது.
இதனை இலக்காகக் கொண்டு சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களை விரைவில் ஆரம்பிக்க வேண்டும்.
விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான செயற்பாடுகளை முன்னோக்கி கொண்டுச் செல்ல எதிர்ப்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலின் வெற்றியை நாட்டின் அனைத்து மக்களுக்கும் சமர்ப்பிப்பதாக அவர் கூறினார். இந்த வெற்றிகாக பல்வேறு தியாகங்கள் முன்னெடுக்கப்பட்டதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.