ஆபிரிக்காவில் வேகமாக பரவும் குரங்கம்மை நோய்
குரங்கம்மை நோய் ஆபிரிக்காவின் பல பகுதிகளிலும் வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
கடந்த இரண்டு வருடங்களில் இரண்டாவது தடவையாகவும் ஆபிரிக்க பிராந்தியத்தில் இந்த நோய் வேகமாக பரவி வருகிறது. நோயை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் ஆபிரிக்க நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.