Home » இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றியை நோக்கி

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றியை நோக்கி

Source

சுற்றுலா இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடரவுள்ளது.

ஓவல் மைதானத்தில் இடம்பெற்று வரும் இந்த போட்டியில், 219 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவின் போது ஒரு விக்கட்டை இழந்த நிலையில், 94 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 156 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் டுயாசைர முரஅயசய 4 விக்கெட்டுக்களையும், ஏiளாறய குநசயெனெழ 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இங்கிலாந்து அணி தமது முதலாவது இன்னிங்ஸில் 325 ஓட்டங்களையும் இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்ஸில் 236 ஓட்டங்களையும் பெற்றிருந்தன.

திமுத் கருணாரத்ன இந்த போட்டியில் 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்த போதிலும், அவர் ஏழாயிரம் டெஸ்ட் ஓட்டங்களைக் கடந்தார். அந்த இலக்கை கடந்த நான்காவது இலங்கை வீரராக அவர் பதிவானார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image