இதுவரை 122 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.
பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஒன்றும், மூன்று சுயேட்சைக் குழுக்களும் நேற்று வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 122 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன. பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிவரை இடம்பெறும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட செயலகங்களில் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் வளாகத்தைச் சுற்றி விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.