இந்தியா-இலங்கை அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி இன்று பிற்பகல்..
சுற்றுலா இந்திய அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் இன்று இடம்பெறவுள்ளது.
பகலிரவு போட்டியாக இந்த போட்டி நடைபெறவுள்ளது. போட்டி பிற்பகல் 2.30ற்கு ஆரம்பமாகும்.
ரஞ்சன் மடுகல்லே: நடுவராக பங்கேற்கும் 400ஆவது ஒருநாள் போட்டி…
இதேவேளை, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நடுவரான, ரஞ்சன் மடுகல்லே ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், போட்டி நடுவராக சாதனை படைக்கப்போகின்றார்.
கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள இலங்கை – இந்திய போட்டி, அவரது 400ஆவது ஒருநாள் போட்டியாகும்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் 30 ஆண்டுகள் போட்டி நடுவராக பணியாற்றிய பெருமையும் இவரையே சாரும்.
1996ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டிகளுக்கு அவர் நடுவராக செயல்பட்டுள்ளார்.
சமபோஷ மாகாண விளையாட்டுப் போட்டி:
2024ஆம் ஆண்டுக்கான சமபோஷ மாகாண விளையாட்டுப் போட்டிகள் இம்மாதம் 21ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 13ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.
வடமத்திய. வடமேல், கிழக்கு, ஊவா, தென் மாகாணங்களைச் சேர்ந்த வீரர்கள் போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர். மாகாணக் கல்வி அலுவலகம் மற்றும் CBL நிறுவனம் ஆகியன அனுசரணை வழங்குகின்றன.
சுமார் இரண்டாயிரம் பாடசாலைகளை சேர்ந்த, 18 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்கள், 70க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்கவுள்ளதாக CBL நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மஞ்சுள தஹநாயக்க தெரிவித்துள்ளார்.