இந்தியா – கனடா இடையில் மீண்டும் இராஜதந்திர மோதல்.
கனடாவிற்கும் – இந்தியாவிற்கும் இடையிலான அரசியல் பதற்றம் மேலும் வலுவடைந்திருக்கிறது. இரண்டு நாடுகளிலும் பணியாற்றும் தமது தூதுவர்களையும் உரிய நாடுகள் வெளியேற்றியுள்ளன.
சீக்கிய இனத்தைச் சேர்ந்த ஹர்திப் சிங் என்ற பிரிவினைவாத தலைவர் கனடாவில் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் இந்திய முகவர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக பிரதமர் ஜஸ்ரின் ரூடோ மீண்டும் குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து இந்த நெருக்கடி மேலும் வலுவடைந்துள்ளது.
கனேடியப் பிரதமரின் இந்தக் குற்றச்சாட்டை இந்திய வெளிவிவகார அமைச்சு முற்றாக நிராகரித்திருக்கிறது. கனடாவில் தற்சமயம் ஏழு இலட்சத்து 70 ஆயிரத்திற்கும் அதிகமான சீக்கிய மக்கள் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.