இந்திய – நியூசிலாந்து: டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி எட்டு விக்கெட்டுகளால் வெற்றி
இந்திய – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி எட்டு விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.
முன்னதாக, இந்திய அணி தனது முதலாவது இனிங்சில் 46 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாவது இனிங்சில் 462 ஓட்டங்களைப் பெற்றது.
நியூசிலாந்து அணி தனது முதலாவது இனிங்சில் 402 ஓட்டங்களைப் பெற்றது. நியூசிலாந்து அணி பெற்றுக்கொண்ட வெற்றியானது 36 வருடங்களின் பின்னர் இந்திய மண்ணில் பதிவு செய்யப்பட்ட வெற்றியாகும்.
இதுவரை நியூசிலாந்து அணி இந்திய மண்ணில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்தப் போட்டியில் பல சாதனைகளும் நிலைநாட்டப்பட்டன. இந்திய அணி இந்திய மண்ணில் மூன்றாவது ஆகக்குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 24ஆம் திகதி இந்தியாவின் புனே நகரில் இடம்பெறும்.