இந்திய மீனவர்களின் அத்துமீறல்களினால் ஏற்படும் நெருக்கடிகள் பற்றி ஆராயும் கலந்துரையாடல் துறைசார் அமைச்சர் தலைமையில்
இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பில் மேற்கொள்ளும் அத்தமீறல்கள் இடைநிறுத்தப்படவேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இந்திய கடற்தொழிலாளர்களின் இழுவைப்படகுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை விஸ்தரிப்பது அவசியமாகும். சகல கடற்தொழில் மாவட்டங்களிலும் இது தொடர்பான பாதுகாப்பு பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அவர் அலியுறுத்தியுள்ளார். இந்திய மீனவர்களின் அத்துமீறல்களினால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் பற்றி ஆராயும் நோக்குடன் சம்மந்தப்பட்ட தரப்புகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது அவர் கருத்த வெளியிட்டார். மீனவர்களின் ஊடாக இடம்பெறும் மோசடி செயற்பாடுகளை இடைநிறுத்தவதற்காக கடற்தொழில் மாவட்டங்களில் ஆலோசனைக் குழுக்களை நியமிப்பதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.