இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களின் அந்நியச் செலாவனி 11 தசம் 3 வீதத்தினால் அதிகரிப்பு
2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களின் அந்நியச் செலாவனி 11 தசம் 3 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சிpத்த சியம்பலாபிட்டடிய தெரிவித்துள்ளார். இந்த வருடத்தின் முதல் ஆறு மாத காலங்களில் மூவாயிரத்து 144 மில்லியன் டொலர் அந்நியச் செலாவனி கிடைத்துள்ளது. சுற்றுலாத்துறையின் ஊடான வருமானம் 80 வீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.