இனவாத அரசியல் கட்சிகளால் மக்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர் – சீலரத்ன தேரர்
இனவாதம் மிக்க அரசியல் கட்சிகளினால் இலங்கையில் உள்ள மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டிருப்பதாக ஜனசெத்த முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சங்கைக்குரிய பத்தரமுல்லே சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டு, அதற்கு தெளிவான தீர்வு முன்வைக்கத் தான் தயார் என்றும் அவர் கூறினார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே சங்கைக்குரிய தேரர் இந்த விடயத்தைக் கூறினார்.