இன்று இந்துக்களுக்கு முக்கியமான ஆடி அமாவாசை தினமாகும்.
இன்று இந்துக்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பும் நிறைந்த நாளொன்றாகும். இன்றயைதினம் ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசையாக ஆடி அமைவாசை சிறப்பு பெறுகிறது.
இன்றையதினத்தில் இந்துக்கள் அதிகாலை நித்திரை விட்டெழுந்து தீர்த்தமாடி, சிவாலய தரிசனத்திலும் பிதிர் தர்ப்பனத்திலும், அன்னதானத்திலும் ஈடுபடுவார்கள்.
பிதிர் தேவர்களை வழிபாடு செய்வதால் பிதிர்களின் தோஷங்களில் இருந்து நீக்கம் பெறலாம் என இந்துக்கள் நம்புகிறார்கள்.
யாழ்ப்பாணத்தில் கீரிமலை நகுலேஸ்வரத்திலும், மட்டக்களப்பில் திருகோவில் கடலிலும், மாமாங்கம் அமர்தகலி தீர்த்தத்திலும், திருகோணமலையில் திருகோணஸ்வரத்திலும் இந்துக்கள் தீர்த்தமாடி பிதிர் கடன்களை நிறைவேற்றுவார்கள்.
தந்தையில்லாத குடும்பங்களுக்கு இந்த பிதிர் தோஷம் நிவாரண கடன்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
ஒரு வருடத்திற்கு ஒருமுறை வரும் இத்தகைய ஆடி அமாவாசையில் மேற்கொள்ளப்படும் பிதிர் கடன்கள் வருடாந்திற்கான தோஷ நிவாரணமாக அமையும்.
இவ்வாறு பிதிர் கடன்களை மேற்கொள்பவர்கள் குறிப்பிட்ட சிரார்த்த தினத்தில் பிதிர் கடன்களை செய்வதிலிருந்து தவிர்ந்து கொள்ளலாம்.
கொழும்பில் முகத்துவாரம் கடற்கரையிலும் வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகிலுள்ள கடற்கரையிலும் பிதிர்கடன்களை நிறைவேற்ற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.