இன, மத வேறுபாடுகள் இன்றிஇ நாட்டு மக்கள் அணி திரண்டுள்ளதாக தெரிவிப்பு
நாட்டின் தூய்மையான அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தியே என பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ஊழல் அற்ற தூய்மையான தலைவர் அனுரகுமார திஸாநாயக்க என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனுரகுமார திஸாநாயக்கவுக்காக நாடு முழுவதும் இன, மத வேறுபாடுகள் இன்றி நாட்டு மக்கள் அனைவரும் அணி திரண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
காலி – யட்டல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டில் ஊழல் நிர்வாகம் இருக்காது என்று அவர் தெரிவித்தார்.
இதேவேளை, காலி – உனன்விட்டிய பிரதேசத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற மற்றுமொரு பொதுக் கூட்டத்தில், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான புதிய வேலைத்திட்டம் தற்போது தேசத்திற்கு முன்வைக்கப்பட்டுள்ளதாக ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு அனைத்து குழுக்களிடமிருந்தும் ஆதரவு கிடைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, பொரலஸ்கமுவ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா,
76 வருட கால ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான வேலைத்திட்டத்தை தமது கட்சி ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தார்.