Home » இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள் கைது

இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள் கைது

Source

இலங்கை கடற்பரப்பினுள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 22 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். 

நெடுந்தீவு கடற்பரப்பு அருகே 12 இராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டு படகுகளுடனும் மன்னார் கடற்பரப்பில் 10 இராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டு படகுகளுடனும் கடற் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். 

மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இவர்கள் இன்றைய தினம் ஊர்காவற்றுறை மற்றும் மன்னார் நீதவான் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

The post இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள் கைது appeared first on LNW Tamil.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image