இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கான வரி அதிகரிப்பு
இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது. மீன், பருப்பு, மாசி ஆகிய இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கும் புதிய வரி விதிக்கப்பட்டிருக்கிறது.
இதன்படி இறக்குமதி செய்யப்படும் குளிரூட்டப்பட்ட மீனுக்கு 10 வீதம் வரி அறவிடப்படும். மாசி ஒரு கிலோவிற்கு 302 ரூபாய் விசேட வர்த்தகப் பண்ட வரி விதிக்கப்பட்டுள்ளது.
பருப்பு, மஞ்சள் பருப்பு மற்றும் மைசூர் பருப்பு ஒரு கிலோவிற்கு 25 சத வரி விதிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.