அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் (USTR) வெளியிட்ட தகவலின்படி, இலங்கைக்கு முன்பு 12.5% என நிர்ணயிக்கப்பட்டிருந்த அமெரிக்க இறக்குமதி சுங்கவரி, 10% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
ஆர்ஜென்டினா, பங்களாதேஷ், பிரித்தானியா, கம்போடியா, கனடா, ஈக்வடோர்,குவாத்தமாலா, ஒண்டுராஸ், இந்தியா, இந்தோனேசியா, ஜோர்தான், மலேசியா, மெக்சிகோ, பாகிஸ்தான், இலங்கை, டிரினிடாட் மற்றும் டொபாகோ ஆகிய நாடுகளின் பொருட்களின் மீது அமெரிக்கா 10% வரியை விதிக்கவுள்ளது.
சீனா உள்ளிட்ட 38 நாடுகளுக்கு 12.5% வரியை விதிப்பதற்கு ட்ரம்ப் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
அத்துடன் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட 60 வர்த்தக பங்காளி நாடுகளின் பொருட்கள் மீது அமெரிக்கா இந்த புதியை வரியை அறிமுகப்படுத்துகின்றது.
The post இலங்கைக்கு அமெரிக்க தரும் மகிழ்ச்சி செய்தி appeared first on LNW Tamil.