சர்வதேச அளவில் இலங்கை கிரிக்கெட்டுக்கு சர்வதேச தடை விதிக்கப்படும் அபாயம் இருப்பதாக அந்த துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.
கிரிக்கெட் சபை இடைநிறுத்தப்பட்டு இடைக்கால கிரிக்கெட் குழு நியமிக்கப்பட்டதன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த புதிய இடைக்கால குழு நியமனமானது கிரிக்கெட் விளையாட்டிற்கான அரசியல் தலையீடு என சர்வதேச கிரிக்கட் பேரவையினால் பார்க்கப்படும் எனவும் அதன் ஊடாக இலங்கையில் கிரிக்கட் விளையாட்டு தடைசெய்யப்படும் அபாயம் அதிகம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கை கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு இருப்பதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை இதற்கு முன்னர் இலங்கைக்கு பல தடவைகள் கடிதம் எழுதியிருந்தது.