(யாழில் இருந்து நடராசா லோகதயாளன்)
இலங்கையின் எந்த மாவட்டத்தில் எந்த திட்டத்தை சீனா மேற்கொள்ளவுள்ளது என்பதனை கண்டறிய இலங்கை மக்களின் சனத்தொகையே போதாது என்கின்ற நிலைமைக்கு இலங்கை தள்ளப்பட்டு விட்டது. ஏனெனில் அனைத்து திட்டங்களுமே ஆரம்பத்துல் இரகசிய திட்டங்களாகவே முன்னெடுக்கப்படுகின்றன.
சீனா இவ்வாறு இரகசியமாக திட்டங்களை மென்னெடுக்க யாழ்ப்பாணக் குடாநாட்டில்
மூன்று தீவுகளில் மின்சார உற்பத்தி திட்டம் அமைச்சரவை அங்கீகாரத்தின் பின்பும் இரத்தாகிய அனுபவமும் சீனாவை உசாரடைய வைத்திருக்க கூடும் என்றே கருதப்படுகின்றது.
கடந்த ஆண்டு கொழும்பில் பேச்சுவார்த்தைக் குழுவொன்றை நியமித்து, அந்தக் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அப்போதைய துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனாவால் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. அந்த அறிக்கையின்படி, சிறிலங்காவின் அக்சஸ் இன்ஜினியரிங் மற்றும் கொழும்பு துறைமுகத்துடன் இணைந்து 392 மில்லியன் டொலர் செலவில் BOT திட்டமாக லாஜிஸ்டிக்ஸ் மையத்தை அமைப்பதாக சைனா மெர்ச்சன்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் தெரிவித்துள்ளது. BOT திட்டம் என்பது குறித்த காலத்திற்கு முதலீட்டாளருக்கும் பின்னர் அரசிற்கும் உரித்தானதை குறிக்கின்றது.
தெற்காசிய வர்த்தக மையமானது 50 வருட BOT திட்டமாக இருக்கும் கொழும்பு துறைமுகம் 70% பங்குகளையும், Access Engineering மற்றும் இலங்கை துறைமுக அதிகார சபை தலா 15% பங்குகளையும் கொண்டிருக்கும். இந்த திட்டமானது “ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு 26 மில்லியன் அமெரிக்க டொலர் முற்பணமாக கூடுதலாக 126 மில்லியன் டொலர் செலுத்தப்படும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டது. கொழும்பு துறைமுகத்தின் மையப்பகுதியில் 530,000 கன மீற்றர் கொள்ளளவு கொண்ட எட்டு மாடிக் கட்டிடம் ஒன்று இதற்காக கட்டப்படவுள்ளது.
2023 ஆம் ஆண்டின் இறுதி அரையாண்டில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு 2025 ஆம் ஆண்டின் இறுதியில் இது நிறைவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது துறைமுக அணுகல் உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலை வழியாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துடன் இணைக்கப்படும்.
பல நாடுகளின் ஒருங்கிணைப்பு, கொள்கலன் சரக்கு நிலையமாகவும் விளங்கும் என எதிர்பார்க்கப்படுவதோடு பொது கிடங்கு மற்றும் பெறுமதி சேர் சேவைகள் உட்பட பல சேவைகளை வழங்கும். இது தொடர்பில் துறைமுக அதிகார சபையின் செய்தித் தொடர்பாளர் சித்ரல் ஜெயவர்ண, துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சினால் ஒப்பந்தம் கையாளப்படுவதால், ஒப்பந்தம் தொடர்பான உரிய தகவல்கள் துறைமுக அதிகார சபையிடம் இருந்து பெற முடியவில்லை. எனவும் கூறப்படுகின்றது.
துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தை தொடர்பு கொள்ள முயன்றும் அது பலனில்லை.
இவை மட்டுமன்றி இக் கட்டுரை பிரசுரமாகும்போதும் இலங்கையில் என்ன திட்டத்தின் ஊடாக உள்வர சீனா முனைகின்றதா என தற்போது பலரையும் உசாரடைய வைத்துள்ளதுள்மை நியாயமான சந்தேகமாகவே காணப்படுகின்றது. ஏனெனில் கடந்த வாரம் அதாவது 2023.05-26 முதல் கொழும்பு சங்கர்லால் ஐந்து நட்சத்திர விடுதியில் ஒரு வாரமாக ஓர் மிகப் பெரும் சீன அதிகாரிகள் கூட்டமே தங்கியிருந்துள்ளனர்.
இவ்வாறு தங்கியிருந்த சீனர்களின் எண்ணிக்கை 40 முதல் 50 வரையானோர் எனவும் இவர்களுடன் கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தின் அதிகாரிகளும் உடனிருந்தமை மட்டுமன்றி பல கட்ட சந்திப்புக்கள் கூட்டங்களும் இடம்பெற்றுள்ளன. இந்தச் சந்திப்புக்களின்போது சீன விசுவாசிகள் மட்டுமன்றி இரு பக்கமும் தலையை காட்டும் அரசியல்வாதிகளும் பங்குகொள்ளத் தவறவில்லை.
இங்கே இடம்பெற்ற இரவு விருந்து உபசாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (தற்போதைய) தலைவர்களில் ஒருவரும் பங்குகொண்டிருந்தார் எனபது மட்டுமன்றி அங்கே ஓர் சங்கடமான நகைச் சுவையும் இடம்பெற்றுள்ளது.
சங்கர்லால் விடுதியிலே கடந்த செவ்வாய்க் கிழமை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நெதர்லாந்து தூதுவரைச் சந்திக்கச் சென்றுள்ளார் சந்திப்பை நிறைவு செய்து வெளியேறும் சமயம் அங்கே அதிக சீன நாட்டவர்களின் பிரசன்னத்தைக் கண்டு என்ன ஏது என எவரிடம் வினாவலாம் என நாலுபக்கமும் தேடிய சமயம் அங்கே நின்ற இலங்கைக்கான சீன நாட்டுத் தூத்கத்தின் அதிகாரி இந்த நாடாளுமன்ற உறுப்பினரை இனம் கண்டுவிட்டார். அப்போது சீன அதிகாரி ஓடிச் சென்று நாடாளுமன்ற உறுப்பினரை வரவேற்று உங்களிற்கும் இன்றா சந்திப்பிற்கு நேரம் தந்தனர் உங்கள் சக உறுப்பினர் ஞாயிறு இரவு உணவுடன் வந்து சந்தித்து சென்றாரே என உளறிவிட்டார்.
இந்த நேரம் சீன அதிகாரிகளுடன் தேவையற்று வாயை கொடுத்து அதனால் இந்தியாவிடம் மாட்டுப்பட விரும்பாத தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் அவரிடம் இருந்து தப்பி பிழைத்து வெளியேறி விட்டார்.
இங்கே இவ்வளவு அதிக சீன அதிகாரிகள் கொழும்பில் ஒரு வாரமாக ஏன் எதற்கு வந்தனர் என பலரும் தற்போதே தலையை பிய்க்கின்றனர்.
நெதர்லாந்து தூதுவரை சந்திக்கச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினரிடம் நீங்கள் சீன அதிகாரிகளிடம் என்ன பேசினீர்கள் என வினாவியபோது ஐயகோ சீன அதிகாரிகள் அந்த விடுதியில் நிற்பதே எனக்கு தெரியாது அவர்கள் என்னை அனுகியபோதே அவர்கள் அந்த விடுதியில் நின்றமை எனக்கும் தெரியும் என்றார்.
இதேநேரம் கடந்த 18ஆம் திகதி இரவு இலங்கைக்குள் போலிக் கடவுச் சீட்டு மூலம் நாட்டிற்குள் வந்த சீன பிரஜைகள் தம்மை மீண்டும் சீனாவிற்கு அனுப்புதனை தடை செய்யக்கோரி கடந்த 22 ஆம் திகதி இலங்கையின் மேன் முறையீட்டு நீதிமன்றில் றிட் மனு ஒன்றை தாக்கல் செய்த சமயம் சட்டமா அதிபர் சார்பில் மன்றிற்கு சமர்ப்பித்த விடயம் மேலும் தூக்கி வாரிப் போட்டுள்ளது அதாவது அந்த சீனப் பிரஜை சீனாவிலேயே தேடப்படும் ஓர் நபர் என சீனத் தூதரகம் அறிவித்துள்ளதாக மன்றுரைத்துள்ளார். இதனால் சீனப் பிரஜை சார்பில் தாக்கல் செய்த மனு கை வாங்கப்பட்டு விட்டது. இவ்வாறு இலங்கைக்குள் போலிக் கடவுச் சீட்டில் இலங்கைக்குள் ஊடுருவிய சீனப் பிரஜை ஏன், எதற்கு வந்தார் என்பது ஒரு விடயமாக இருக்கும் நிலையில் அவ்வாறு மோசடி கடவுச் சீட்டில் இலங்கை வந்நவர் தொதர்பில் இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் கூறியமை உண்மையான தகவல்தானா எனவும் தற்போது ஆராயப்படுகின்றது. ஏனெனில் அவ்வாறு கூறி அந்த சீனப் பிரஜையை தப்பிக்க வைக்கும் முயற்சியா என்றும் ஓர் சந்தேகம் உள்ளது.
இவை இவ்வாறு இருக்க சாங்கிறில்லா விடுதியில் தங்கியிருந்த பெரும் சீன அதிகாரிகளின் இலங்கைக்கான பயணம் தொடர்பில் தற்போதுதான் பலரும் அறிந்து கொண்டமையினால் மிகத் தீவிரமாக தேடப்படுகின்றது.
இங்கும் இரவு விருந்தில் கலந்துகொண்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பில் என்ன தகவல் எப்போது வந்தாளும் அது தொடர்பில் தொடர்பு கொண்டு கேட்டால் இல்லை என அவரும் அது தொடர்பில் மறுத்து வந்தாலும் அவரும் தொடர்ச்சியாக அகப்பட்ட வண்ணமே உள்ளார். இவ்வாறெல்லாம்
உள்ளூர் அரசியல்களும் அரசியல்வாதிகளின் விடயங்களும் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகின்றதோ அந்த அளவிற்கு இன்று இலங்கையில் சீனா தொடர்பிலும் பல விடயங்கள் உலாவுகின்றன.
இலங்கையில் நிலவிய உச்சபட்ச பொருளாதார நெருக்கடியினைப் பயன்படுத்தி சீனா இலங்கையில் அகலக் கால் பதித்தமையே இதற்கு காரணம் என ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.