இலங்கையின் பண வீக்கம் இந்த மாதத்தில் ஒன்று தசம் ஒரு சத வீதத்தினால் வீழ்ச்சி
நுகர்வு விலைச் சுட்டெண்ணுக்கு அமைவாக இலங்கையின் பண வீக்கம் கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதத்தில் ஒன்று தசம் ஒரு சத வீதத்தினால் வீழ்ச்சி அடைந்திருப்பதாக புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கையின் பண வீக்கம் கடந்த மாதத்தில் 51 தசம் 7 சத வீதமாக காணப்பட்டது. இந்த மாதத்தில் பண வீக்கம் 50 தசம் 6 சத வீதமாக பதிவாகியுள்ளது. குறித்த காலப்பகுதியில் உணவுப்பொருட்களின் பண வீக்கம் 5 தசம் 6 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
