Home » இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைக்க சுவீடன் ஆதரவு.

இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைக்க சுவீடன் ஆதரவு.

Source

முதலீடுகளை மேற்கொள்வதில் ஸ்வீடன் அரசாங்கம் இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு முன்னுரிமை அளித்து வருவதாக இலங்கைக்கான சுவீடன் தூதுவர் ஜோன் தெஸ்லெஃப் தெரிவித்துள்ளார்.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நேற்று சந்தித்து கலந்துரையாடியபோது, சுவீடன் அரசாங்கம் இலங்கையின் உணவு பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு ஃபிளவர் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அதன்போது, சிறுவர் போஷாக்கு விடயம் தொடர்பில் சுவீடன் தூதுவரின் கவனத்திற்குக் கொண்டுவந்த பிரதமர், பிராந்தியத்திலேயே இலங்கை உயர் சுகாதார சுட்டெண்ணை பேணி வருகின்ற போதிலும், பாடசாலை மாணவர்களிடையே போஷாக்குடன் தொடர்புடைய சவால்கள் தொடர்ந்தும் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

சுவீடனில் உள்ள இலங்கை மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் வீசா சிக்கல்கள் குறித்தும் சுவீடன் தூதுவரின் கவனத்திற்கு பிரதமர் கொண்டுவந்தார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image