இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையை அடையும் – உலக வங்கி
இவ்வாண்டு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி நான்கு தசம் நான்கு சதவீதத்தை அடைந்து பொருளாதாரம் ஸ்திரத்தன்மை அடையக் கூடும் என உலக வங்கி எதிர்வு கூறியுள்ளது.
இந்த வங்கி வருடத்திற்கு இரண்டு தடவை இலங்கையின் அபிவிருத்தி பற்றி அறிக்கையொன்றை வெளியிடுவது வழக்கம்.
இம்முறை எதிர்காலத்திற்கான வாய்ப்புக்களை திறத்தல் என்ற தொனிப்பொருளில் வெளியான அறிக்கையில் பொருளாதார வளர்ச்சி குறித்த எதிர்வு கூறல்கள் இடம்பெற்றுள்ளன.
வெற்றிகரமாக கடன்களை மறுசீரமைத்தல், நடுத்தரளவிலான பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தல், வறுமையை குறைத்தல் ஆகிய இலக்குகள் நோக்கி முன்னெடுக்கப்படும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்பில் பெரும்பாக பொருளியல் ஸ்திரத்தன்மை தங்கியிருப்பதாக மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.