இலங்கையில் மூன்று நாட்களாக பொலிஸ் மா அதிபர் பதவி வெற்றிடமாக உள்ளது.
அது, முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. க்கிரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு ஜூன் 26ஆம் திகதியுடன் முடிவடைந்தது.
விக்கிரமரத்ன தற்போது உத்தியோகபூர்வமாக ஓய்வு பெற்றுவிட்டதால், மீண்டும் அவரது சேவையை நீடிக்க முடியாது.
புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம் என்பதும் மிக நீண்ட செயல்முறையாகும். அரசியலமைப்பு சபைக்கு ஜனாதிபதி ஒரு பெயரை அனுப்ப வேண்டும், அரசியலமைப்பு சபை கூடி, அவர்கள் அதை அங்கீகரிக்க வேண்டும், பின்னர் ஜனாதிபதி பொருத்தமான நியமனத்தை செய்ய வேண்டும்.
ஆனால் இவை எதுவும் நடப்பதாக தெரியவில்லை.
பொலிஸ்துறை பொது பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ளது. பொதுப் பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தனது பணியை உகந்த முறையில் செய்து அது தொடர்பான பொறுப்புகளை நிறைவேற்றி வருவதால் ஜனாதிபதியும் மௌனமாக இருப்பதாகத் தெரிகிறது.