Home » இலங்கை-இங்கிலாந்து கிரிக்கெட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் இன்று

இலங்கை-இங்கிலாந்து கிரிக்கெட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் இன்று

Source

சுற்றுலா இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் இன்றாகும். தனது முதலாவது இனிங்சிற்காக பதிலுக்கு துடுப்பெடுத்தாடும் இங்கிலாந்து அணி, நேற்றைய ஆட்டநேர முடிவின் போது, விக்கெட் இழப்பின்றி 22 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இலங்கை அணி அதன் முதல் இனிங்சில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 236 ஓட்டங்களை பெற்றது. இலங்கை அணி சார்பில் பந்து வீச்சாளராக அறிமுகமான மிலான் ரட்நாயக்க தனது கன்னி அரைச் சதத்தை பெற்றார். அவர் அணி சார்பாக 72 ஓட்டங்களை பெற்றார்.

இதேவேளை பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் இன்றாகும். முதலில் துடுப்பெடுத்தாடும் பாகிஸ்தான் அணி நேற்றைய ஆட்டநேர முடிவின் போது 4 விக்கெட் இழப்பிற்கு 158 ஓட்டங்களை பெற்றிருந்தது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image