சர்வதேச சமூகத்தின் நிதி நம்பகத்தன்மையை வென்றெடுத்த நாடாக இலங்கை மாறும் என்று ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு இலங்கைக்கு கிடைத்தமை இதற்கான சிறந்த உதாரணமாகும். இந்த நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பது அவசியமாகும். இந்த இணக்கப்பாட்டுன் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி என்பனவற்றின் ஊடாக மேலும் 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு கிடைக்வுள்ளமை குறிப்பிடத்தக்கது.