Home » இலங்கை Vs இங்கிலாந்து: கிரிக்கட் போட்டியின் இரண்டாவது நாள் இன்று

இலங்கை Vs இங்கிலாந்து: கிரிக்கட் போட்டியின் இரண்டாவது நாள் இன்று

Source

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது.

தமது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நேற்றைய நாள் முடிவின் போது, 3 விக்கெட் இழப்பிற்கு 221 ஓட்டங்களைப் பெற்றது. இரண்டாவது நாளான இன்று பிற்பகல் 3.45க்கு ஓவல் மைதானத்தில் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை, இலங்கை பாடசாலை ரக்பி உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்தும் ஜனாதிபதி சவால் கிண்ண 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியின் அரையிறுதிச் சுற்று இன்று நடைபெறவுள்ளது.

நாளையும் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. பம்பலப்பிட்டி சென் பீற்றர் கல்லூரிக்கும், கொழும்பு வெஸ்லி கல்லூரிக்கும் இடையில் நடைபெறும் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று மாலை 4 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

போட்டி கொழும்பு ரோயல் கல்லூரி மைதானத்தில் நடைபெறும். டயலொக் ஆசியாட்டா நிறுவனம் இதற்கான அனுசரணையை வழங்குகிறது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image