இஸ்ரேலில் இடம்பெற்ற தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, உதவி தேவைப்படும் எந்தவொரு இலங்கையர்களும் தொலைபேசி இலக்கம்: (+94) 117966396, WhatsApp தொலைபேசி எண்: (+94) 767463391 அல்லது மின்னஞ்சல்: [email protected] ஊடாக தேவையான உதவிகளைப் பெற முடியும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.