இஸ்ரேல்-காஸா போரில் உயிரிழந்த பலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 40 ஆயிரம்
கடந்த ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி ஆரம்பமான இஸ்ரேல்-காஸா போர் 11 மாதங்களை கடந்துள்ளது. பணயக்கைதிகளை விடுவிப்பது உள்ளிட்ட போர்நிறுத்த ஒப்பந்தங்களை காஸா இன்னும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
தற்போது காஸா எல்லைப் பகுதியில் சுகாதார ஊழியர்கள் போலியோ சொட்டு மருந்து வழங்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், காஸா எல்லைப் பகுதியில் கடந்த வியாழன் அன்று சில மணித்தியாலங்களுக்கு போர் நிறுத்;தப்பட்டிருந்தது. யுத்தத்தில் இதுவரை 40 ஆயிரத்திற்கும் அதிகமான பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சரும் நேற்று இஸ்ரேலுக்கு விஜயம் செய்தார். உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் கேரிக்கை விடுத்தார்.
வடக்கு காஸாவில் உள்ள ஹலிமா அல் சதியா பாடசாலை மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் எட்டு பாடசாலை மாணவர்கள் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், காஸா எல்லைப் பகுதியில் உள்ள அகதி முகாம்களையும் இஸ்ரேல் குறிவைத்துள்ளது. போரில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 94 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது.